தமிழகத்தில் பரபரப்பாக நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 99 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.அஸ்லம் பாஷா.
அவர் போட்டியிடும் வார்டன நூராபாத், ஶ்ரீராம்நகர், மேட்டுத்தோட்டம், கல்லறைசேரி,
வெள்ளளூர் ரோடு,சித்தன்னபுரம், செட்டிபாலையம் ரோடு,எவரஸ்ட்,கோனவாய்கால் பாளையம் போன்ற பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் இடுபட்டு வருகிறார்.
கோணவாய்கால் பாளையம் பகுதியில் 10ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும் நீங்கள் வெற்றி பெற்ற உடன் எங்கள் பகுதி அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை வைத்தனர்.
வேட்பாளர் அஸ்லாம் பாஷா வை வரவேற்ற அந்த பகுதி மக்களுக்கு திமுக வெற்றி பெற்றதும் கோரிக்கை கலை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார் வேட்பாளர் அஸ்லாம் பாஷா.
99டிவிஷனில் திமுக வேட்பாளர் மு.அஸ்லாம் பாஷா விற்கும் அதிமுக வேட்பாளருக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் கோணவாய்கால் பாளையம் பகுதி மக்களின் குமுறலால் திமுகவிற்கு ஆதரவு அலை என்றே சொல்லலாம் என்கின்றனர் அக்கட்சியினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சையத் காதர், குறிச்சி.