ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்க்கும்
ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண்ணான வினிராமனும் நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையில் இதை அறிந்த இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பின்பு கொரோனா பரவல் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகளால் இவர்களுடைய திருமணம் தள்ளி போனது.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இருவருக்கும் மார்ச் 27ஆம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருமணத்திற்காக மஞ்சள் பத்திரிகை அடிக்கப்பட்டுள்ளது. வினிராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ஆவார் இவர் ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்து வந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து தற்போது கல்யாணம் வரை வந்துவிட்டது. இவர்களது திருமணத்தை காட்டிலும் தமிழில் அச்சடிக்கப்பட்ட இவர்களது திருமண பத்திரிகை வைரலாகி வருகிறது.
இவர்களுக்கு மெல்போனில் திருமணம் நடத்தப்படுகிறது. வினிராமனின் பெற்றோர் வெங்கட்ராம ராமானுஜ தாஸன் ஸ்ரீமதி விஜயலட்சுமி ராமன் என்றும் அது போல் மேக்ஸ்வெல்லின் பெற்றோர் நீல் மேக்ஸ்வெல் ஜாய் என்றும் அந்த பத்திரிகையில் போடப்பட்டுள்ளது.
இவர்களது திருமணம் கன்னிகாதானம் செய்து கொடுக்கப்படுகிறது. அதாவது முழுக்க முழுக்க பெண் வீட்டார் ஏற்பாட்டில் இந்த திருமணம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.