சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்லவன் இல்லத்தில் இன்று போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். ”தமிழக அரசே MTC – நிர்வாகமே சென்னை மாநகரத்தில் வாகன பெருக்கம், போக்குவரத்து நெரிசல் கணக்கில் கொண்டு அனைத்து வழி தடங்களிலும் கால நேர அட்டவணையை மாற்று ஒரு பேருந்துக்கு ஒரு ஓட்டுநர் , ஒரு நடத்துனர் என்ற முறையை அமுல்படுத்து.”
தொழிலாளர்களிடையே மோதலை உருவாக்காதே என்றும்,
நடத்துனர்கள் சுழல் முறை பதவி வழங்க வேண்டும் என்றும், பேருந்து உதிரிபாகங்கள் தரமான நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யவும், நிர்வாகமே பேருந்து நடையை குறைத்தால் ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்றும், 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களின் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும்,
”புதிய பென்சனை ரத்து செய் , கழக பென்சனை வழங்கு !
SETC நிர்வாகமே காலி பணியிடங்களை உடனே நிரப்புக !
டபுள் டூட்டிக்கு நீர்பந்தம் செய்யாதே !
1 ஆப்சென்ட் போட்டு சம்பளத்தை வெட்டாதே ! சங்க பாகுபாடு காட்டாதே , சுழல்முறை போஸ்டிங்கை அமுலாக்கு !” என வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அப்துல் ரஹீம், திருவல்லிக்கேணி.