கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த சாய் நிகேஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் விமானவியல் துறை படிப்பு படித்து வந்த நிலையில் தற்போது உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் ஏற்பட்டு மிகவும் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ள இந்த நேரத்தில் உயிர் தப்பித்து நாடு திரும்பினால் போதும் என்கிற மனநிலையில் உள்ள மக்கள் மத்தியில் உக்ரைன் நாட்டுக்காக அங்குள்ள ஜார்ஜியன் நேஷனல் லிஜயன் எனும் துணை ராணுவப் படையில் சாய் நிகேஷ் இணைந்துள்ளார். இது குறித்து இந்திய உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம் சிறு வயது முதலே இந்திய ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்து வந்த சாய்
நிகேஷ் உயரம் குறைவால் நமது ராணுவத்தில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.