தமிழகத்தில் பல விதமான சங்கங்களும் அமைப்புகளும் உள்ளன. இந்த சங்கங்களும் அமைப்புகளும் அவர்களுக்கு ஏற்படும் அநீதிக்காக போராட்டம், உண்ணாவிரதம், போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் மேலும் கூட்டங்கள் மற்றும் மாநாடு போன்றவற்றை கூட்டி தங்களுடைய கொள்கைகள் கோட்பாடுகள் மற்றும் அனைவருடைய கருத்துக்களை கேட்க கலந்தாய்வு கூட்டம் போன்றவற்றை நடத்துவார்கள்.
நாம் இப்பொழுது பார்க்க போகும் செய்தி என்னவென்றால் சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த செல்வ பாண்டியன் என்பவர் 2014 ஆம் ஆண்டு “தமிழ்நாடு மது அருந்துவோர் விழிப்புணர்வு சங்கம்”என்ற ஒரு அமைப்பை இவரது தலைமையில் ஏற்படுத்தியுள்ளார் இவரே இந்த அமைப்பின் நிறுவனர் ஆவார். மேலும் இந்த அமைப்பிற்கு செயலாளர், பொருளாளர் ,இவர்களுக்கு உதவியாளர் என்ற நிர்வாக ரீதியில் செயல்பட்டு வருகிறார்கள்.
இவர்களது சங்கத்தில் மது குடிக்கும் அனைவரும் உறுப்பினர்கள் என்றும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை சுமார் 2 கோடி உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் கூறுகின்றார். மேலும் மதுபானங்களின் விலையை நினைத்த நேரத்தில் காரணமில்லாமல் உயர்துகிறார்கள் என்றும் அதற்காக கண்டனக்குரல் எழுப்பபடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அரசுக்கு எங்களால்தான் வருமானம் வருகிறது எனவும் கூறினார்.மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.
“நாங்கள் குவாட்டரில் கை வைத்தால்தான் யாரும் கோட்டையிலேயே கொடியேற்ற முடியும்”
இது எங்களின் இடிமுழக்கம் என்றும்
“குடிப்போருக்கு புனரமைப்பு குடிக்காதவருக்கு பாதுகாப்பு”
என்ற கொள்கை முழக்கத்தோடு செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
மாநாடு நடத்த அரசு அனுமதி அளிப்பார்களா என்ற போது நாங்கள் கள்ளச்சாராயம் குடித்து விட்டு மாநாடு நடத்தவில்லை என்றும் அரசு டாஸ்மாக் நிறுவனம் நடத்தும் கடையில் மது வாங்கி குடிக்கிறோம் என்றும். மதுபானம் தயாரிப்பவர் சங்கம் வைத்துள்ளனர் மதுபானம் விற்பவர்கள் சங்கம் வைத்து உள்ளார்கள் அதுபோன்று உயிரை பணையம் வைத்து மது குடிக்கும் நாங்கள் ஏன் சங்கம் வைக்கக்கூடாது மாநாடு நடத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
மதுபான விலையை உயர்த்துவதால் மது குடிப்போரின் தாக்கத்தை குறைக்க போகிறார்களா?
2003 ஆம் ஆண்டு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையை திறந்ததில் இருந்து இதுவரை மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர விலையை உயர்த்துவதால் குறைந்தது இல்லை எனவே விலையை உயர்த்துவதால் மது குடிப்போரின் எண்ணிக்கை குறையும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
நாங்கள் மதுபான கடையில் மது வாங்கும் போது வங்கிகளில் கடன் வாங்கியோ காசோலை கொடுத்தோ மதுபானம் வழங்குவதில்லை என்றும் பணமாக கொடுத்து தான் மது வாங்குகிறோம் மேலும் குவாட்டர் பாட்டிலுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை அதிகம் கொடுத்துதான் வாங்குகிறோம்.
கள்ளச்சாராயம் காய்ச்சி அதை விற்கும் தொழில் செய்வோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை காலம் முடிந்து வெளியில் வந்தால் அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் அவர்களுக்கு நிதி ஒதுக்கி அவர்கள் விரும்பும் தொழில் செய்ய வசதி வாய்ப்பினை ஏற்படுத்தி அவர்கள் மீண்டும் அந்த தொழிலுக்கு செல்லாமல் இருக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அதற்கு ஒரு திட்டத்தை போடுவார்கள். ஆனால் டாஸ்மாக் என்பது அரசாங்கமே நடத்தும் ஒரு மதுபான நிறுவனம் அந்த மதுபானக் கடையில் மது வாங்கி குடித்து எங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நிவாரணம் கிடையாது. மேலும் குடியிலிருந்து விடுபட நினைத்தால் எங்களுக்கு மறுவாழ்வு மையம் என்பது கிடையாது இதை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும்.
டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்கி குடித்து குடிநோயாளி ஆக மாறி நாளடைவில் இறக்க நேரிட்டால் அந்த இறந்த நபரின் குடும்பத்திலுள்ள அவரின் மனைவிக்கோ அல்லது மகனை இழந்த பெற்றோருக்கோ அல்லது அவரது இழப்பால் பாதிக்கப்பட்டு உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கோ மாதம் 5000/= ரூபாய் அரசு பென்சன் ஒன்று வழங்க வேண்டும் என்றும்.ஒரு ரூபாய் சாக்லெட் அல்லது பத்து ரூபாய் பிஸ்கட் சாப்பிட்டு அதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டால் அவர் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு செல்லலாம் என்று இருக்கும்போது 100 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து குவாட்டர் வாங்கி குடிக்கும் எங்களுக்கு ஏன் இழப்பீடு தர கூடாது என்ற கேள்வியையும் வைக்கிறார்.
கள்,மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் சில்லறை விற்பனை நிறுவனத்தை தொடங்கினார்கள். 2003 ஆம் ஆண்டு சுமார் 40 வகையான மதுபானங்களை கொண்டு விற்பனையை தொடங்கினார்கள் இன்று 400க்கும் அதிகமான வகையில் மதுபானங்கள் விற்பனைக்கு வந்து உள்ளது.
நாங்கள் இதுவரை 9 முறை பாட்டில் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட உள்ளோம் என்ற தகவலையும் கூறினார்.
விரைவில் மாநாடு நடத்த அரசிடம் அனுமதி கேட்டு அதற்கான வேலைகளை தொடங்குவோம் என்று தெரிவித்தார்.
நாளை வரலாறு செய்திகளுக்காக
-நிருபர்கள் குழு.