கற்றாழை குளிர்பானத்தின் தொழில் வாய்ப்பு முகாம் கோவையில் துவங்கப்பட்டது…

இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் ஹெல்த்தி ஹாபிட்ஸ் கற்றாழை குளிர்பானத்தின் தொழில் வாய்ப்பு முகாம் கோவையில் துவங்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில்,ஹெல்த்தி ஹாபிட்ஸ் எனும் பிராண்டில் கற்றாழை குளிர்பான தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முழுவதும் இளம் தொழில் முனைவோரால் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் குளிர்பானத்தை பான் இந்தியா பிராண்டாக சந்தைப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் அனைத்து தரப்பினரையும் தொழில் முனைவோர்களாக ஆக்கும் வகையில், மாவட்டங்களின் பின்கோடுகள் அடிப்படையில்,பின்கோட் டிஸ்ட்ரிபியூட்டர் எனும் புதிய பரிணாமத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இதனை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் வகையில் கோவையில் முதன் முறையாக தொழில் வாய்ப்பு முகாம் துவங்கியது.

வ.ஊ.சி.உயிரியல் பூங்கா அருகில், மூன்று நாட்கள் நடைபெற உள்ள முகாமை மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார் துவக்கி வைத்தார்.முகாம் குறித்து,மேலாளர் சபரீஸ் ராஜன் கூறுகையில், எங்களது தொழில் வாய்ப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் எந்த விதமான முதலீடும் இல்லாமல் எங்கள் நிறுவனத்தின் மாதிரிகளை மற்றும் பெற்றுக் கொண்டு தொழில் துவங்கலாம் எனவும், இந்த வாய்ப்பை அனைவரும் பெற்றுக்கொள்ள இந்த முகாமில் கலந்து கொண்டு கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்…

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts