கோவை மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 13 நான்கு மற்றும் ஆறு சக்கர வாகனங்கள் மற்றும் 23 இரண்டு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 36 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 22.03.2022 ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் ஏலம் எடுக்க பார்வையிட 19.03.2022 முதல் நிறுத்தி வைக்கப்படும்.
ஏலம் எடுக்க விரும்புவோர் 21.03.2022 ஆம் தேதி மாலை 05.00 மணி வரை கோவை மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு ஆயுதப்படை பிரிவு அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தலாம். மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ1000 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ 2000 முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும் வைப்புத்தொகை செலுத்தி பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஏலம் எடுப்பவர்கள் வைப்புத் தொகையுடன் இருசக்கர வாகனத்திற்கு 12 சதவீதமும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதமும் ஜிஎஸ்டி(G.S.T) வரியை சேர்த்து முழு தொகையையும் அன்றே ரோக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்ள நபர் ஒன்றுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ 50/- செலுத்த வேண்டும் ஏலத்துக்கு வரும் நபர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும்.மேலும் விபரங்களுக்கு வாகன பிரிவு அலுவலக தொலைபேசி எண்:0422-2241795 ல் தொடர்பு கொள்ளலாம்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.