கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் அம்பராம்பாளையத்திலிருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இந்த சாலையை சீரமைக்க தோண்டி பல மாதங்கள் ஆகின்றன. எனவே சாலைகள் குண்டும் குழியுமாக சீர்கெட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றன மேலும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்ந சிரமத்தை தருகிறது எனவே இந்த சாலையை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன்.ஆனைமலை.