பள்ளி, கல்லூரி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள மாநில கல்வித்துறையின் அரசாணை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது அதை தொடர்ந்து அம்மாநிலத்தில் பெரும் பிரச்சினை ஏற்பட்டது, அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 15-03-2022 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது மேலும் சர்ச்சையானது.
நீதிபதிகளின் தீர்ப்பு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரீத்து ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீக்ஷித், ஜே.எம். காஸி அடங்கிய அமர்வு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் கீழ் அத்தியாவசியமான மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை என்ற தீர்ப்பு முஸ்லீம்கள் மத்தியில் கொந்தளிப்பு எற்படுத்தியது,
குர்ஆனை படிக்காமல் ஹிஜாப் பற்றிய தீர்ப்பு நீதிபதிகளின் அறியாமை என்றே கூறவேண்டும்.
தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளை கண்டித்து தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்களை அறிவித்து, ததஜ என்ற அமைப்பு போராட்டம் நடத்தினர் அதிராம்பட்டினம் மற்றும் மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த பேச்சாளர்கள் ஜமால் உஸ்மானி மற்றும் கோவை ரஹ்மத்துல்லாஹ் நீதிபதிகளை தரக்குறைவாக ஒருமையில் பேசியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்து உள்ளார்,
-காதர் குறிச்சி.