தமிழகம் முழுவதும் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செலவநாகரத்தினம்.
இவர் தற்போது கோவையில் பணியாற்றி வரும் நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பத்ரிநாராயணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்ரிநாராயணன் ஏற்கனவே திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.