சென்னை எம்.ஜி.எம்.புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மையம் மற்றும் கோவை பொன்னையா மருத்துவமனை இணைந்து கோவை மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் பயன்பெறும் விதமாக புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. சென்னை எம்.ஜி.எம்.புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மையம் தன்னுடையை சேவையை விரிவு படுத்தும் விதமாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பொன்னையா மருத்துவமனையுடன் இணைந்து துவக்கியுள்ளது.இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.இதில் ,எம்.ஜி.எம்.ஹெல்த் கேரின் மார்பக புற்று நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் வேதா பத்ம பிரியா,புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையின் மூத்த நிபுணர் டாக்டர் சிவகுமார் மகாலிங்கம்,பொன்னையா மருத்துவமனையின் மருத்துவர்கள் கோபிநாத்,மனோபிரியா ஆகியோர் பேசினர்.
அதி நவீன கட்டமைப்புடன் துவங்கப்பட்ட இந்த மையத்தில் நோயாளிகளை சந்திக்க சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேரின் சிறப்பு புற்று நோய் நிபுணர்கள் ஒவ்வொரு வாரமும் வந்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால் கோவையில் எம்ஜிஎம் தன்னுடைய புற்றுநோய் மையத்தை சிறப்பாக செயல்பட உள்ளதாக தெரிவித்தனர்..இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் தரமான குறைவான கட்டணத்தில் மருத்துவ சேவையை பெறும் விதமாக இந்த மையம் இன்று துவங்கி உள்ளதாகவும் குறிப்பாக,
மேமோ ஆன் வீல்ஸ் எனும் நடமாடும் புற்றுநோய் பரிசோதனை மையத்தில், கோவையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பெண்களுக்கு பரிசோதனை செய்ய உள்ளதாகவும் குறிப்பாக இங்கு பரிசோதனை செய்யும் ரேடியோலஜிஸ்ட் மற்றும் நிபுணர்கள் முழுவதும் பெண்களாக இருப்பதால் பெண்கள் தயக்கமின்றி இங்கு பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர்..முன்னதாக நிகழ்ச்சியில்,பிரபல பெண் எழுத்தாளரும்,பொது பேச்சாளரும் ஆன ஜெய்ந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன்,மார்பகம் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் ஆண் மருத்துவர்களால் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் செய்து கொள்ள சில நேரங்களில் தயக்கம் ஏற்படுவதால்,பெண் மருத்துவர்களிடம் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவதால் எளிதான அணுகுமுறையை பெற முடிவதாக தெரிவித்தார்.
– சீனி,போத்தனூர்.