கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெள்ளலூர் பேரூராட்சியில் நடைபெற்ற தேர்தலில்
அதிமுக ,திமுக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையில் அதிமுக 8 வார்டுகளிலும் திமுக 6 வார்டுகளிலும் சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மிகப்பெரும் போட்டி நிலவியது . பெரும்பான்மையுடன் இருந்த அதிமுகவினருக்கும் இரண்டு உறுப்பினர் குறைவாக உள்ள திமுகவினருக்கும் பதவியேற்பு நாளான இன்று மிகப் பெரும் மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது.
காவல்துறையினர் விரைந்து வந்து அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதிமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் சென்று உரிய நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈஷா. சி.ராஜேந்திரன்.
One Response
தலைவர் தேர்தலில் அதிமுக உறுப்பினர் கார்த்திகேயன் வாக்கு பெட்டியை உடைத்து தேர்தலை நிறுத்தினார்