இன்று சிங்கம்புணரி சோமசுந்தரம் டவரில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் உள்ள 92 கிளைச் செயலாளர்களுக்கான அங்கீகாரம் மற்றும் சான்று வழங்கும் விழா இன்று சிங்கம்புணரி சோமசுந்தரம் டவரில் நடைபெற்றது. விழாவிற்கு, சிவகங்கை மாவட்ட ஒன்றியக்குழு தலைவர் பொன்மணி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி ஒன்றியச் செயலாளர் திருவாசகம், சிங்கம்புணரி பேரூர்க் கழக செயலாளர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் உள்ள 92 கிளைகளுக்கான செயலாளர்கள் நியமனம் மற்றும் தேர்தல் காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய கிளைச் செயலாளர்களுக்கு பாராட்டுக்களும், அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து தரப்பட்ட சான்றுகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் கிருங்கை ஸ்டாலின், காளாப்பூர் சசிகுமார், சிவபுரி பீமன், கணேசன், ஜெயந்தன் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.