சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கலைச்செல்வி(25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அடிக்கடி வாக்குவாதம் நடந்திருக்கிறது.
இதன் காரணமாக, கடந்த மார்ச் 11ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலைச்செல்வி தன்மீது மண்ணெண்ணை ஊற்றி, தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். உடற்கூறு ஆய்வுக்கு பின்பு கலைச்செல்வியின் உடல், அவரது கணவர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து கலைச்செல்வியின் தாய் விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் உலகம்பட்டி காவல் ஆய்வாளர் கலாராணி, புழுதிபட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.