கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த, இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான நாகராஜன், இவர் கடந்த 2018ம் ஆண்டு காந்தி என்பவரிடம், அவரது வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார், இது காந்தியின் மறுமகனான செந்தில் குமார் என்பவருக்கு பிடிக்கவில்லை என கூறபடுகின்றது, இதனால் அடிக்கடி, செந்தில்குமார், நாகராஜனிடம் தகறாறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது
, மேலும் இதுகுறித்து நாகராஜன் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே செந்தில்குமார் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் வீடு குறித்த வழக்கு என்பதால் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரபட்டுள்ளது, இந்த நிலையில் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேற்று இதுகுறித்து செந்தில்குமார், நாகராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செந்தில்குமார், நாகராஜனின் செல்போனை பறித்து உடைத்துள்ளார், மேலும் தனது கைகளால் நாகராஜனை தாக்கியுள்ளார் இதனால் பயந்துபோன நாகராஜன் இதுகுறித்து குனியமுதுர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்தில் குமாரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.