கோவை மாவட்டம் தடாகம் காப்புகாடு பகுதியில் ஒரே நாளில் ஆண் யானை மற்றும் காட்டுமாடு உயிரிழந்தது வனத்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் காப்புகாடு பகுதி மாங்கரை வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது நேற்று (மார்ச் 17) வனத்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை உயரலுவலர்கள், வனவிலங்கு மருத்துவர்கர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
யானை ஆந்த்ராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. முழுமையான பரிசோதனைக்குப் பிறகே யானை உயிரிழந்ததற்கான காரணம் தெரிய வரும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
அதே போல் தடாகம் காப்புகாடு பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் காட்டுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் மாட்டின் பின்னாங்கால்களில் காயம் ஏற்பட்டதால் அதிக தூரம் நடக்க முடியாமலும் மேய்ச்சல் இல்லாமலும் உயிரிழந்தது தெரியவந்தது.
அருண்குமார் கிணத்துக்கடவு,
V. ஹரிகிருஷ்ணன்,
I.அனஸ்.