தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள், கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகள், காயல்பட்டினம் நகராட்சியிலுள்ள 18 வார்டுகள், திருச்செந்தூர் நகராட்சியிலுள்ள 27 வார்டுகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் உள்ள 261 வார்டுகள் ஆக மொத்தம் 402 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 22-ந் தேதி வெளியிடப்பட்டன.
பதவியேற்பு விழா :
இதைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பு பந்தல்கள் போடப்பட்டும், வாழைமரங்கள் கட்டப்பட்டு இருந்தன. அலங்கார தோரணங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
நேற்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது. இதனால் காலை முதல் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வந்தனர். தூத்துக்குடி மாநகராட்சியில் ஆணையாளர் சாரூஸ்ரீ மற்றும் அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையாளர், செயல் அலுவலர்கள் தலைமை தாங்கி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தனர். அதன்படி உறுப்பினர்கள் ஒவ்வொருவராக உறுதிமொழி ஏற்று கவுன்சிலராக பதவியேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.