தேசிய வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற பொள்ளாச்சி மாணவிகள் குவியும் பாராட்டு..!!
கோவைமாவட்டம்.மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் இம்மாதம் 24ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரைநடைபெற்ற தேசிய இன்டோர் ஃபீல்டு வில்வித்தை போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர்.
இப் போட்டியில் 10 வயது 14 வயது 17 வயது 19 வயது சீனியர் என ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனி நடைபெற்றது. இப்போட்டியில் பொள்ளாச்சி ஸ்ரீ சாய் அகடமி ஆப் போர்ட்ஸ் சார்பாக 16 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜ் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன்,ஆனைமலை .