கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி கடத்தல்காரர்கள் கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது அனுதினமும் தொடரும் தொடர்கதையாகவே உள்ளது.
இந்நிலையில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடத்தலில் ஈடுபடும் சிலரை மட்டும் பிடிப்பதாகவும், சிலரை சில்லறை வாங்கிக்கொண்டு விட்டு விடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டை
உறுதிப்படுத்தும் விதமாக ரேஷன் அரிசி கடத்தல் காரர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இரவு பகல் பாராமல் வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்யும் பட்சத்தில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது நிதர்சனம்.
-M.சுரேஷ்குமார்.