நீர் மேலாண்மையில் புதுமையாக விவசாயத்தில் புதிய புரட்சியை ஜீவா கருவி உருவாக்கும் என அதன் இயக்குனர் சீனிவாசன் கோவையில் தெரிவித்துள்ளார். பெருகி வரும் மக்கள் தொகையில் செயற்கை உரங்கள்,பிளாஸ்டிக் பயன்பாடு என இயற்கை குறித்த போதிய கவனிப்பின்மையால் பெரும்பாலான இடங்களில், நீர் மற்றும் மண் மாசடைந்து வருகிறது.இதனால் விவசாயத்தில் விளைச்சலும் பாதிப்படைந்து வரும் நிலையில், போர்த் பேஸ் வாட்டர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரும்,பிரபல இந்திய நீர் மேலாண்மை விஞ்ஞானியுமான டாக்டர் கிருஷ்ண மாதப்பா புதிய ஜீவா எனும் கருவியை உருவாக்கி நீர் மேலாண்மையில் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார்.இந்நலையில் ஜீவா கருவி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.இதில் நிறுவனத்தின் இயக்குனர் சீனிவாசன் பேசினார். அப்போது அவர்,தூய்மையான மற்றும் ஆற்றல்மிக்க தண்ணீருக்காக ஜீவா என்னும் புதிய கருவியை நாங்கள் உருவாக்கி உள்ளதகாவும், இந்த கருவியை உள்நாட்டில் தயாரிக்கப்படும் பம்ப் மற்றும் பைப்புக்களில் எளிதாக பொருத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கருவி வழியாக செல்லும் சாதாரண தண்ணீர் மூன்று படி நிலைகளில் தண்ணீரை ஆற்றல்மிக்கதாக மாற்றும் செயல்முறையை மேற்கொள்கிறது . அது தண்ணீரில் இருக்கும் எந்த அழுத்தத்தையும் குறைத்து ஆற்றல் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது . மேலும் தண்ணீரை அதன் இயற்கையான மற்றும் ஊட்டச்சத்து நிலைக்கு மாற்றுகிறது என்று தெரிவித்தார் .தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகளை சந்தித்து பேசியதில், பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் நீர் மிகவும் மாசுபட்டதாகவும் மோசமானதாகவும் , தரமற்றதாகவும் இருப்பதாகவும், . இந்த நிலையில் ஜீவா கருவி பயன்படுத்தியதில் விவசாய பொருட்களில் மகசூல் அதிகரித்து இருப்பதோடு,மண் மற்றும் வேர்களில் நல்ல மாற்றம் தெரிவதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவிப்பதாக கூறினார்.
– சீனி,போத்தனூர்.