கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் கெட்டி மல்லன் புதூரில் எழுந்தருளியுள்ள பத்ரகாளி அம்மனுக்கு ஆண்டுதோறும் திருவிழா மற்றும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கோவிலுக்கு அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து திருவிழாவில் கலந்து கொண்டு குண்டம் இறங்குவது வழக்கமாக நடைபெறும் ஒன்று. கடந்த காலங்களில் கொரோனா பாதிப்பின் காரணமாக குறைவான பொதுமக்களே கலந்து கொண்ட நிலையில் இந்த வருட திருவிழா வெகு விமர்சையாக தொடங்கி உள்ளது.
புகழ்பெற்ற இவ்விழாவின் பூவோடு நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு குண்டம் வளர்க்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து நாளை காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இந்நிகழ்ச்சிக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்துகொண்டு இத்திருவிழாவினை சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஆனைமலை பகுதி நிருபர்
-அலாவுதீன்.