தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 1. லட்சத்து 30 மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான ஓட்டுனர் நடத்துனர் இன்று பணிக்கு வரவில்லை.
பஸ்கள் இல்லாமல் கோயம்பேடு பஸ்நிலையம் வெறிச்சோடி இருப்பதையும் பஸ்சுக்காக தத்தளித்த பயணிகளையும் படத்தில் காணலாம் தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான ஓட்டுனர் நடத்துனர், இன்று பணிக்கு வரவில்லை.
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம் இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது.
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் திட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தை நடத்துகின்றன.
சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எம்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் குதித்துள்ளன. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர்கள் பெருமளவில் போராட்டத்தில் இறங்கியதால் இயல்பை விட பாதிப்பு அதிகமாக இருந்தது.
“ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது” என மத்திய-மாநில அரசுகள் எச்சரித்தபோதும் கூட அவற்றை மீறி இன்று வேலைநிறுத்தம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அப்துல் ரஹீம், திருவல்லிக்கேணி.