பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…. பொள்ளாச்சியில் இன்று மாலை 4 மணியளவில் திருவள்ளுவர் திடலில் பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் சார்பில் இஸ்லாமிய அடிப்படை உரிமையான ஹிஜாபை முஸ்லிம் மாணவியர் அணி யதடை விதித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையை மறுத்த கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்தும்,
திரும்ப பெற கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் தலைவர் வழக்கறிஞர் சானவாஸ்கான் அவர்கள் தலைமை தாங்கினார் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அலாவுதீன்.