பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
இந்திய கடற்படையின் 25-வது தளபதியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டம் பகுதியைச் சேர்ந்த அட்மிரல் ஆர்.ஹரிகுமார் கடந்த நவம்பர் மாதம் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், நேற்று அட்மிரல் ஆர். ஹரிகுமார், தனது மனைவி கலா மற்றும் உறவினர்களுடன், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு வந்தார். அங்கு அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் மாசாணியம்மனை அவர் வழிபட்டார். கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற நீதிக் கல் வழிபாடு, மிளகாய் அரைத்தல் ஆகியவை குறித்து அர்ச்சகர்களிடம் கேட்டறிந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.