கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு இரண்டு குழந்தைகளுடன் வந்த பெண் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அருகிலிருந்த தண்ணீர் குடத்தை எடுத்து அந்த பெண் மீது ஊற்றி அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுத்தனர்.
இது குறித்து சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார் விசாரணையில் தன்னாச்சியப்பன் வீதியை சேர்ந்த சதீஷ் என்பவரது மனைவி சத்யா என்பது தெரியவந்தது. கடந்த மாதத்தில் அந்த பெண் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது தகராறில் சத்யாவையும், அவருடைய 8 வயது மகனையும் சிலர் தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்து சத்யா காவல்துறையில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே தன்னையும் குழந்தையும் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த பெண்ணிடம் சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்
உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இது போன்று செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
-M.சுரேஷ்குமார்.