கோவை மாவட்டம் போத்தனூர் எம்ஜிஆர் நகர் குடியிருப்பு பகுதியில் நான்கு குரங்குகள் உணவு தேடி போத்தனூர் பகுதியில் சுற்றி கொண்டுள்ளது இதனை அங்குள்ள முதியவர்களும் குழந்தைகௌளும் அச்சத்துடன் கண்டு வருகிறார்கள்.
சென்ற வாரம் போத்தனூர் சாரதாமில் ரோடு பகுதியில் உள்ள ராகம் பேக்கரி அருகே இருக்கும் அலைபேசி கோபுரம் மீது ஏறிநின்று நான்கு மணி நேரத்துக்கு மேல் இருந்ததாகவும் பின்பு கீழே இறங்கி சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது இது போன்ற வனவிலங்குகள் போத்தனூர் பகுதியில் வருவதைக் கண்டு அங்குள்ள பொதுமக்கள் அச்சம் அடைகிறார்கள்.
ஆகையால் வனவிலங்கு அதிகாரிகள் இந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று வன ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஈசா. குறிச்சி காதர்.