பொள்ளாச்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி பொள்ளாச்சி நகரம் மற்றும் சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, அம்பராம்பாளையம், புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், கெங்கம்பாளையம், சங்கம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி, மாக்கினாம்பட்டி, ரங்கசமுத்திரம், சூளேஸ்வரன்பட்டி, அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம் மற்றும் ஜோதி நகர் ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோன்று தாளக்கரை முத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட நல்லூர், ஜமீன்முத்தூர், கருமாபுரம், போடிபாளையம், அய்யம்பாளையம், ஜலத்தூர், தேவம்பாடி, களத்துபுதூர், காளிபாளையம், நல்லிக்கவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சுப்பேகவுண்டன்புதூர், வாழைக்கொம்புநாகூர், பூச்சனாரி, திவான்சாபுதூர், கணபதிபாளையம், மீனாட்சிபுரம், திம்மங்குத்து, மண்ணூர், கோபாலபுரம், செடிமுத்தூர், ஆத்துப்பொள்ளாச்சி ஆகிய இடங்களிலும் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்.பொள்ளாச்சி.