சென்னை: 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது. மூன்று வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் அவர் விரைவில் சிறையில் இருந்து வெளிவர உள்ளார்.
பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கினார்.
அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “என்மீது புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே, என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தது தவறானது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் மீது அண்மையில் நில அபகரிப்பு வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டார். கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியது, திமுக பிரமுகரை தாக்கியது ஆகிய வழக்குகளில் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மூன்றாவதாக நில அபகரிப்பு வழக்கு போடப்பட்டு மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் அந்த இரண்டு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமின் மனுவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தல் அவர் மனு தாக்கல் செய்தார்.
முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான வழக்கில் கைதசெய்யப்பட்டு உள்ளாதால், ஜாமின் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
புகார்தாரர் தரப்பிலும் ஜாமின் வழங்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் அவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கி இருக்க வேண்டும் அங்கு உள்ள காவல் நிலைத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் மூன்று வழக்கிலும் ஜாமின் கிடைத்திருப்பதால் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.