பொள்ளாச்சி நவ மலையில் ஒற்றை காட்டு யானைக்கு உணவுதரச் சென்ற வனத்துறை ஊழியர்களை விரட்டியது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவமலை சாலையில் கடந்த 13-ம் தேதி ஒற்றை காட்டு யானை 2 கார்களை தூக்கி வீசியதில், ஒருவர் காயமுற்றார்.
இந்நிலையில் வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி, வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒற்றை காட்டு யானைக்கு மாலை வனத்துறை வாகனத்தில் யானைக்கு மஸ்து குறைக்கும் வகையில் தண்டு உணவு அளிக்க முயற்சித்தபோது வனத்துறை வாகனத்தை தாக்க யானை முற்பட்டது.
இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு யானை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்கா
-V. ஹரிகிருஷ்ணன். பொள்ளாச்சி.