கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை மீன்கரை சாலையில் ஆலங்கடவு பிரிவு அருகே நேற்று TN 75 E4053 பதிவு எண் கொண்ட லாரி கட்டுப்பாட்டை இழந்த விபத்துக் குள்ளானது.
இந்நிலையில் விபத்து குறித்து தகவலறிந்த
ஆனைமலை வட்ட வழங்கல் அலுவலர், தனி வருவாய் ஆய்வாளர், குடிமைப்பொருள் ஆனைமலை உணவு தடுப்பு காவல் பிரிவு காவல் ஆய்வாளர், காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உள்ளிட்டோர் விபத்துக்குள்ளான லாரியை பரிசோதனை செய்து பார்த்தபோது சுமார் 15 டன் பொதுவிநியோகத் திட்ட அரிசி என தெரியவந்தது இதனை அடுத்து அரிசி மூட்டைகளை வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உணவு தடுப்புக்காவல் பிரிவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது மேலும் இது தொடர்பாக லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது உணவு தடுப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.