பிறரை கிண்டலும் கேலி செய்வதில் சமூக வலைத்தளத்தினர் அவசரப்படுகின்றனரோ? நமக்கு கிண்டலாக தெரியும் ஒரு வீடியோவால் ஒரு குடும்பமே மிக பெரிய மன உளைச்சல் ஆகி உள்ளது. கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி சரஸ்வதி. இவர் கோவை மாநகராட்சி 9 வது வார்டு மாமன்ற உறுப்பினர், அதன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தவறாக பேசியது மிக பெரிய வைரலாகி வந்தது. பெரியசாமி, போர் போடும் இயந்திரத்துக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
தி.மு.க மாநகர் மேற்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக இருக்கிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் மருத்துவர், மகன் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலைசெய்கிறார்.
சரஸ்வதி பெரிதாகப் படிக்கவில்லை. வெளி உலகப் பழக்கவழக்கம் குறைவு. கோவை மாநகராட்சி 9 வது வார்டு அது பெண்கள் வார்டு என்பதால் பெரியசாமி, தன் மனைவியை போட்டியிட வைத்தார்.
அக்கம், பக்கத்தினருடன் நெருங்கிப் பழகுவார். நன்கு பேசுவார். ஆனால் ஊடகங்கள், மேடை, மைக் எல்லாம் அவருக்குப் புதிது. பிரசாரத்தின்போதே அவர் ஊடகங்களிடம் பேச மறுத்துவிட்டார். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கின்றனர். கவுன்சிலர் பதவியை, அவர்கள் வருமானத்துக்கானதாகப் பார்க்கவில்லை.
என கூறும் சரஸ்வதி குடும்பத்தினர் சரஸ்வதி அவர்கள் பதவி ஏற்று கொண்ட போது முதல் மேடை மைக் எல்லாம் பார்த்து பதற்றம் அடைந்து உள்ளார், பதவி ஏற்பு உறுதி மொழி கூறும் போது சுத்தமாக அவர் பெரிய பதற்றம் அடைந்து தப்பும் தவறுமாக சொல்லி உள்ளார்.
இதை விமர்சனம் என்ற பெயரில் முகநூலில் அனைவரும் பதிவு செய்து வைரலாக ஆனது இதனால் மிக பெரிய மன உளைச்சல் ஆகி அக்கம் பக்கம் உள்ளவர்கள் கிண்டலாக பேசும் நிலையில் குடும்பமே மிக பெரிய வருத்தத்தோடு உள்ளனர் என. நாம் விளையாட்டாக செய்யும் செயல் கூட இன்று அப்பாவி குடும்பம் ஒன்று பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது அவசர பட்டு எதையும் பரப்பி விடாமல் இருப்பது சமூக வலைதளங்களில் பயணிப்பவர்கள் கடமையாகும். நாம் சிறிதாக செய்யும் விசயத்தில் கூட பின் விளைவுகள் இவ்வளவு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
-துல்கர்னி உடுமலை. நன்றி விகடன்