கோவை மாவட்டம் வெள்ளலூர் பரபரப்பாக நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் கோவை மாவட்டத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் வெள்ளூர் பேரூராட்சி யார் வசம் என்ற கேள்வி எழுந்துள்ளது இந்நிலையில் திமுக ஆறு இடங்களும் அ.திமுக எட்டு இடங்களையும் சுயச்சை ஒரு இடமும் கைப்பற்றியுள்ள நிலையில் பேரூராட்சி நிர்வாகம் யார் அமைப்பது என்ற கடும் போட்டி நிலவுகிறது.
சென்ற நாட்களில் இது சம்பந்தமாக வாக்கெடுப்பு நடந்த சமயத்தில் பெரும் பதற்றம் நிலவியது அதனால் போலீஸ் அங்கு வரவழைக்கப்பட்டு இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நீதிமன்றம் வரை சென்று உள்ளதை பார்த்து வந்தோம் மீண்டும் 26 3 2022 இன்று வாக்கெடுப்பு நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் மீண்டும் பதற்றம் நிலவியது, நிலைமை மோசம் அடைந்ததால் தடியடி நடந்ததாக தெரிகிறது. திமுக அதிமுக இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர் படுத்தும் வகையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ராஜேந்திரன். ஈசா.