ஹிஜாப் தடை விவகாரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது எனவும், இந்த உத்தரவை கர்நாடக அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் திராவிடர் பன்பாட்டு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பை அம்மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கோவை உக்கடம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் இயக்கங்கள், தலித் இயக்கங்கள், இசுலாமிய இயக்கங்கள் உள்ளிட்ட 17 இயக்கங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்வதை கண்டித்தும், இத்தடையை விலக்க கோரியும், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெண்மணி நாட்டில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை நாடு முழுவதும் அமல்படுத்த முயலும் சங்பரிவார அமைப்புகளுக்கும், மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார். இந்த விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமாக உள்ளதாகவும், மதுரையில் ஹிஜாப் அணிந்து வந்த வாக்காளரை அச்சுறுத்திய நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது போன்ற நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
பேட்டி – வெண்மணி – ஒருங்கிணைப்பாளர், திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம்.
– சீனி,போத்தனூர்.