அகமதபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில், தமிழக அணிக்காக பங்கேற்ற கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி ,2 தங்கம் ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்கள் வென்று,அசத்தியுள்ளார். தேசிய யோகாசன ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பாக இரண்டாவது தேசிய அளவிலான யோகா போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது.மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் நடைபெற்ற இதில், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப்,உத்தரபிரதேசம், என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் யோகாசன வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் தமிழகம் சார்பாக சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவில்,கோவையை சேர்ந்த கல்லூரி மாணவியான வைஷ்ணவி,தனியாக இரண்டு தங்க பதக்கங்களும்,குழுவாக ஒரு வெள்ளியும் வென்று அசத்தியுள்ளார். சீனியர்,தனிநபர் ஆர்ட்டிஸ்டிக் போட்டியில்,ஒரு தங்கம், பாரம்பரிய யோகா போட்டியில் ஒரு ;தங்கம் என தனியாக இரண்டு தங்க பதக்கங்களும், குழு போட்டியில் ஒரு வெள்ளியும் பெற்றுள்ளார்.இந்நிலையில் கோவை திரும்பிய மாணவி வைஷ்ணவிக்கு கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார்,விமலா தம்பதியின் மகளான யோகா வீராங்கனை .வைஷ்ணவி தனது சிறு வயது முதலே யோகாவில், கின்னஸ் உட்பட பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடதக்கது.
– சீனி,போத்தனூர்.