சென்னையில் நேற்றுமுன்தினம் (ஏப்.17)
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் பல தரப்பட்ட கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துசெல்லப்பட்டது.
பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார், நேற்று பிற்பகல் (ஏப்.18) இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிவிப்பு மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பெறப்பட்டுள்ளன. பல தரப்பட்ட கோரிக்கைகளை ஏற்று ஏப்ரல் 18 முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்
-கலையரசன் மகுடஞ்சாவடி.