கோயம்பத்தூர் மற்றும் சுற்றுபுற மாவட்டங்களில் வாழும் ஏழை எளிய மாணவ, மாணவர்களுக்கு அரசு வேலை எளிதாக கிடைக்கும் வகையில்
ஆர்.வி.எஸ் பத்மாவதி குப்புசாமி
இலவச ஐ.ஏ.ஸ் பயிற்சி மையம் கோவையில் இன்று காலை தொடங்கப்பட்டது. இந்த
இலவச ஐ.ஏ.ஸ் பயிற்சி மையத்தை, கல்வி தந்தை கே. வி. குப்புசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த மையத்தின் ஆலோசகராகவும், இயக்குநராகவும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கற்பூரசுந்தர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் கட்டமாக குரூப்- 4போட்டித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு 100 மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பிரதி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை 6 மணி நேரம் வகுப்புகள் நடைபெறவுள்ளது.
ஒவ்வொருவருக்கும் ரூ.3000/- மதிப்பிலான தரமான பாடக் குறிப்பு நூல்கள் இலவசமாக கொடுக்கப்படவுள்ளது. இந்த மாணவ, மாணவியர்களுக்கு மிக உயர்ந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. சென்னை, மதுரை,திருச்சி போன்ற இடங்களிலிருந்து தலைசிறந்த பயிற்சியாளர்களை அழைத்து வந்து இந்த வகுப்புகள் கண்ணம்பாளையத்தில் அமைத்துள்ள கல்லூரி எம்.பி.ஏ வளாகத்தில் நடைபெறுகின்றது. இந்த இலவச பயிற்சிக்கு மாணவ, மாணவியர்களைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. நுழைவுத்தேர்வு எழுத விரும்புவோர் , தங்கள் கல்விச்சான்று மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும். இந்த பயிற்சி மைய தொடக்கவிழா கற்பூரசுந்தர பாண்டியன் தலையமையில் நடைபெற்றது. விழாவில் ரேடியன் பயிலக பயிலாக நிறுவனர் ராஜபூபதி மற்றும் கல்லூரி இயக்குநர் ஸ்ரீவஸ்தன், டாக்டர். பிரபா, டாக்டர். சந்திரிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி,போத்தனூர்.