இந்தியாவிலேயே முதன் முதலாக ஆனைமலையில் இளநீர் உற்பத்தியாளர்கள் சார்பாக இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் துவங்கப்பட்டது. இந்தத் துவக்க நிகழ்சி ஆனைமலையிலுள்ள வாசவி மஹாலில் ஏப்ரல் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை7மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி Ak இரத்தினம் அவர்கள் தலைமையிலும் இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் AE.சீனிவாசன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சம்பத்குமார், துணைத்தலைவர் செல்வராஜ், சங்கநிர்வாகிகள் மோகன்ராஜ், ரஞ்சித், கனேஷ்குமார், சாம்பசிவமூர்த்தி, நாச்சிமுத்து மற்றும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.