கோவை மாவட்டம் கோவை பொது அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நோயாளிகளை சந்திக்க வரும் வாகனங்கள் அதிக அளவில் களவு போவதாக மக்கள் கூறி வருகின்றனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் மூன்று முதல் ஏழு வண்டி வரை வளாகத்துக்குள் நிற்கும் வண்டி அந்தப் பகுதியில் இருக்கும் வண்டிகளையும் நூதன முறையில் களவாடிச் செல்லும் நிலை காணப்படுகிறது.
வாகனங்களை பறிகொடுத்த வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழக்கு பதிவு செய்தாலும் தங்களது வாகனங்கள் உடனடியாக கிடைக்கவில்லை என்று மன வருத்தத்துடன் கூறி வருகின்றனர்காவல்துறை கண்டுபிடித்து தருவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
அதனால் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் வாகனங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா, ராஜேந்திரன்.