திருப்பூர் மாவட்டத்தில் கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை குங்குமம் பாளையம் ஊருக்குள் அமைந்திருக்கும் கால்களின் அருகில் குப்பைகளை டிராக்டர் மூலமாக ஊராட்சி ஊழியர்கள் தலைவர்களின் அனுமதியுடன் குப்பைகளை கொட்ட முயன்ற போது அப்பகுதி மக்கள் பல முறை இதேபோல் எச்சரித்து வாகனங்களை விட்டு விட்டனர் ஆனால் தற்போது வாகனத்தை விடமாட்டோம் ஊராட்சி தலைவர் வந்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே நாங்கள் வாகனத்தை விடுவோம் என்ற கோரிக்கையை வைத்து வழிமறித்து நின்றனர். குப்பை கிடங்கு என்பது ஒன்றே ஒதுக்கி அதில் குப்பைகளை பிரிக்கும் வேலையில் தற்போதைய நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் பின்பற்றி வருகின்ற நிலையில் இங்கு ஏன் கொட்ட இடம் இல்லையா.
இப்படி பொது வெளியில் குப்பைகளை கொட்டினால் துர்நாற்றம் அடைந்து மழை நேரத்தில் புழுக்களும் கொசுக்களும் அதிகரித்து மக்களின் சுகாதாரத்தை சீர்கேடும் வகைகள் ஊராட்சி ஒன்றியம் ஏ நடந்தால் மக்கள் என்ன செய்வார்கள் சுகாதாரத்தை சீரழிக்கும் வகையில் இத்தகைய செயல் உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக பாஷா