கோவையில் ஆட்டிசம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது…இதில் கோவை,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டனர்..கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்..அப்போது அவர், சிறப்பு குழந்தைகளுக்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலமாக அவர்களை மேம்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாகவும், இதனை படிப்படியாக மாவட்ட நிர்வாகம் வழி நடத்தும். இது அரசின் திட்டமாகவே மாறும் என அவர் தெரிவித்தார்.. தொடர்ந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் தங்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக அரங்கில், ஓவிய கண்காட்சியுடன், மேடையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.இதில் மியூசிகல் கீபோர்டு,வாசித்தும் இசையுடன் ஆடி பாடி கலை நிகழ்ச்சிகளை நடத்திய சிறப்பு குழந்தைகளை கைகளை தட்டி பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகபடுத்தினர்.
சிறப்பு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளியின் நிறுவனர் தீபா மோகன் ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், குழந்தைகளின் ஆட்டிச பாதிப்புகளை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப முறையான பயிற்சி கொடுத்தால், சில வருடங்களிலேயே அவர்களை இயல்பான குழந்தைகளாக மாற்றலாம்.
இந்த பயிற்சி காலத்திலேயே அவர்களுக்கான கல்வி முறையாக வழங்கப்படும்.
இதற்கிடையில், உடல் இயக்க பயிற்சிகளும், சீரான பேச்சு பயிற்சியும் கொடுப்பதால், பேச சிரமப்படும் குழந்தைகள் விரைவிலேயே பேசுவதாகவும், மேலும் சிந்தித்தல் குறைபாடு உள்ளவர்களும், விரைவிலேயே நலம் பெறுவதாக அவர் தெரிவித்தார்… மேலும் ஆட்டிசம் குறைபாட்டை சீராக்க தற்போது பல மருத்துவ பயிற்சிகளும், செயல் விளக்க பயிற்சி முறைகளும் வந்துவிட்டன. அதனால் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகள் சில வருட பயிற்சியிலேயே சாதாரண இயல்பு உடைய குழந்தைகளை போல பேசவும், பழகவும் முடிவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். நிகழ்ச்சியில், கௌமார மடாலய சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த. ராம்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
– சீனி,போத்தனூர்.