கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை ஐந்தாவது வீதியில் ஸ்ரீ அபூர்வாஸ் உயர்தர சைவ உணவகத்தின் மூன்றாவது கிளை துவக்க விழா நடைபெற்றது.
கோவையில் சாய்பாபா காலனி மற்றும் காந்திபுரம் நூறடி சாலையில் ஸ்ரீ அபூர்வாஸ் உயர்தர சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் விரும்புகின்ற வகையில் நல்ல சுவையுடன் சைவ உணவுகளை அறுசுவையுடன் வழங்கி வருவதால் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ அபூர்வாஸ் உணவகத்தின் மூன்றாவது கிளை இரண்டு மாடிகளுடன் கோவை காந்திபுரம் க்ராஸ்கட் சாலை, கணபதி சில்க்ஸ் அருகில் துவக்கியுள்ளது..இதற்கான துவக்க விழாவில், முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.உணவகம் குறித்து செயல் இயக்குனர்கள் நவீன் முரளி மற்றும் ஜெகன் பிரதாப் ஆகியோர் கூறுகையில்,ஸ்ரீ அபூர்வாஸ் உயர்தர சைவ உணவகம் இரண்டு மாடிகளுடன் அதிக இட வசதியோடு துவங்கப்பட்டுள்ளதாகவும்,இங்கு பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கென பிரத்யேக ஹால் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தியன், சைனீஸ், தந்தூரி உணவு வகைகள் சமையல் வல்லுனர்களைக் கொண்டு சுத்தமாகத் தயாரித்து உயர்தர சைவ உணவு விநியோகிக்கப்படுகிறது.
காலை, மாலை இரவு என மூன்று வேளையும் உணவு பரிமாறப்படுகிறது.மதிய உணவில் அபூர்வாஸின் சிறப்பாக பொடி மீல்ஸில் பருப்பு,நெய்,மற்றும் பருப்பு பொடியுடன் பரிமாறுவதாக தெரிவித்தனர்.,மேலும் இங்கு சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் காரவகைகளும் இருப்பதாகவும், சாதாரண விலையில் தரமான உயர்தர சைவ உணவை குடும்பத்துடன் சாப்பிடும் வகையில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
-சீனி,போத்தனூர்.