கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் சிறந்த விவசாயியாக மா.ராமசாமி தேர்வு.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தேர்வு செய்யும் போட்டியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு வட்டாரம் நல்லாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த மா.ராமசாமி அவர்கள் முதல் பரிசு பெற்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் இச்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளார். ராமசாமி அவர்கள் மாவட்டத்தில் முதல் பரிசை பெற்றதற்கு இவரது இல்லத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அவரை மனதார பாராட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.