கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பை குடங்கில் கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் சுகாதார குழுவினர், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை தரம் பிரிக்கும் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் பேட்டியின்போது கூறுகையில்;-
தமிழக முதல்வர் அவர்கள் மீண்டும் மஞ்சள் பை என்ற திட்டத்தின் மூலம், நிலம், நீர் மாசுபடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். நீர், நிலம், காற்று மாசுபடுவதை தடுக்க பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னெடுத்துள்ளார். கோவை மாநகராட்சியில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. சுகாதாரமான மாநகராட்சியை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். அதன் ஒருபகுதியாக, கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நீர், நிலம், காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததாக தெரிவித்தவர், தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, நகர்நல அலுவலர் சதீஸ்குமார், அதிகாரிகள் ஹேமலதா, ராஜேஷ், இராதாகிருஷ்ணன், இராமச்சந்திரன், ராமு , மாமன்ற உறுப்பினர்கள் கமலாவதி போஸ், குமுதம் குப்புசாமி, வசந்தாமணி, மணியன், அஸ்லம்பாட்ஷா, சுமித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செய்யத் காதர் குறிச்சி.