சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெருவில் உள்ள காளியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தை ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கிவைத்தார். பெரியமாடு 8 மைல் தூரமும். சின்னமாடு 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் தொடங்கியது. வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர். பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் ஈடுகொடுத்து சாரதிகளும் ஓடிவந்தனர்.
பெரியமாடு பந்தயத்தில் முதல்பரிசை மதுரை மாவட்டம் பாண்டாங்குடி ராமுதேவரும், இரண்டாம் பரிசை சிங்கம்புணரி யாசிகாவும், மூன்றாம் பரிசை மதுரை மாவட்டம் கொடிகுளம் சந்திகாஸ்ரீயும் நான்காம் பரிசை சிங்கம்புணரி வைரவன் ஹன்சிகாவும் பெற்றனர்.
சின்னமாடு பந்தயத்தில் முதல்பரிசை மதுரை மாவட்டம், மேலூர் அழகன் கொளசிக் இணைந்து திருவாதவூர் எஸ். எம். பிரதர்ஸ் குழுவும், இரண்டாம் பரிசை சிங்கம்புணரி செந்தில்குமாரும், மூன்றாம் பரிசை மதுரை மாவட்டம் மேலமடை சீமான் பாண்டியராஜாவும், நான்காம் பரிசை மதுரை மாவட்டம், வெள்ளநாயகம்பட்டி மாணிக்கம் அம்பலம் லக்சனும் பெற்றனர்.
இந்நிகழ்வில் உறவின்முறை நாட்டாமைகள் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம.அருணகிரி. திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர், இந்தியன் செந்தில், திமுக நகர அவைத்தலைவர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மனோகரன்,சத்தியமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிங்கம்புணரி உப்பு செட்டியார் தெரு உறவின்முறையினர் மற்றும் இளைஞர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.