சேலம் மாவட்டம் சங்ககிரியில் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சங்ககிரி ஈரோடு பிரிவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்கள் நினைவு மண்டபத்தில், அவரது உருவப்படத்திற்கு, இன்று காலை, 10 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திரு டிஎம்.செல்வகணபதி, சேலம் மாவட்ட ஆட்சியர் திரு செ .கார்மேகம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் சங்ககிரி, கோட்டாச்சியர் சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், மக்கள் செய்தி தொடர்பு துறை அதிகாரி சங்ககிரி தாசில்தார், துணைதாசில்தார், சங்ககிரி காவல் ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிருவாக அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
-ச.கலையரசன், மகுடஞ்சாவடி.