ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்வதை ‘வித்-அவுட்’ என்று பொதுவாகக் கூறுவார்கள். சாதாரண மின்சார ரயில்கள் என்றாலும் சரி, தொலைதூர பயணத்துக்காக எக்ஸ்பிரஸ் ரயில்கள் வண்டிகள் என்றாலும் சரி, அதற்குரிய டிக்கெட்டுகளை வாங்க வேண்டியது அவசியம். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், அபராதம் முதல் சில மாதங்களுக்கு சிறை வரை தண்டனை உண்டு. ஆனால், ரயிலில் டிக்கெட் இல்லாமலே பயணம் செய்யலாம் என்பது தெரியுமா? எப்படி என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அவசர பயணத்தில் ரயில் கிளம்பும் சில மணிநேரங்கள் முதல் சில நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் தேவைப்படும் சூழல் பலருக்கும் ஏற்படும். இறுதி நேரத்தில் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாது. அதே போல, தட்கல் டிக்கெட்டும் பல நேரங்களில் கிடைக்காது. இந்த சூழலில் பதட்டப்படாமல், ரயிலில் டிக்கெட் ரிசர்வேஷன் இல்லாமல் பயணிக்கலாம் என்ற ஒரு புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றால் நீங்கள் நடைமேடை டிக்கெட் எனப்படும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்க வேண்டும். ரயில்வேயின் சிறப்பு விதிப்படி, அந்த பிளாட்ஃபார்ம் டிக்கெட்டை வைத்துக் கொண்டே நீங்கள் ரயிலில் பயணம் செய்யலாம்.
ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நீங்கள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றாலும் கூட, குறிப்பிட்ட ரயிலில் நீங்கள் பயணம் செய்ய வேண்டுமென்றால், ரயில் நிலைய டிக்கெட் வாங்கி, ரயிலில் செல்லலாம்.
அதன் பின்பு, நீங்கள் டிக்கெட் பரிசோதகரிடம் (Train ticket examiner) சென்று, உங்களுக்கான டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். ரயிலில் சீட் மற்றும் பெர்த் இருந்தால், அதுவும் உங்களுக்கு வழங்கப்படும். அதாவது, டிக்கெட்டை நீங்கள் முன்பதிவு செய்யவில்லை என்றாலும், ரயிலிலேயே வாங்கி பயணத்தை மேற்கொள்ளலாம்.
அவசர காலத்தில் ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற சூழலில் இருப்பவர்களுக்காக இந்தியன் ரயில்வே இந்த தேர்வை வழங்கியுள்ளது. ஆனால், இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால்,
* ரயிலில் ஏறிய பின்பு, TTE இடம் தெரிவித்து, நீங்கள் செல்லும் இடத்துக்கான டிக்கெட்டை வாங்க வேண்டும். TTE ரயிலிலேயே உங்களுக்கான டிக்கெட்டை வழங்குவார்.
இதன் மூலம், பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்குவது, ஒரு நபருக்கு ரயிலில் செல்வதற்கான உரிமையை வழங்குகிறது என்பது தெளிவாகிறது. நீங்கள் எந்த இடத்தில், அதாவது ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்குகிறீர்களோ, அந்த இடத்தில் இருந்து நீங்கள் செல்லும் இடத்திற்கான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படும்.
ஒரு வேளை, உங்களுக்கு அலாட் செய்ய சீட் அல்லது பெர்த் இல்லை என்றால், TTE உங்களுக்கான ரிசர்வேஷனை மறுக்கலாம். ஆனால், உங்களை ரயிலில் இருந்து இறங்கச் சொல்வதற்கு, உங்கள் பயணத்தை தடுப்பதற்கு அதிகாரம் இல்லை. ரிசர்வேஷன் இல்லாதபோது, கூடுதலாக, ரூ. 250 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.