கோவை மாவட்டம் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தடுப்பு சுவரில் ஏறி, போதை ஆசாமி ஒருவர் அட்ராசிட்டி செய்தார்.
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, திடீரென சென்டர் மீடியன் மீது ஏறிய ஒருவர், உடலை வளைத்து, கை, கால்களை ஆட்டி நடமாட துவங்கி விட்டார்.
சலங்கை ஒலி’ படத்தில் நடிகர் கமல் கிணற்று தடுப்பு சுவரில் நின்று ஆடுவது போன்று, சென்டர் மீடியன் சுவற்றில் ஆட்டம் போட்டு அட்ராசிட்டி செய்தார்.
இதை கண்ட வாகன ஓட்டுனர்கள், எங்கே மேலே விழுந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் சாலையை கடந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில், ஆட்டத்தை முடித்து ரோட்டில் இறங்கி நடந்து சென்றார்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘”ரோட்டில் போதையில் அட்டகாசம் செய்வதால், சில நேரங்களில் தகராறு ஏற்படுகிறது. சென்டர் மீடியனில் நின்று ஆடும் போது, அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”‘ என்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.