திருப்பூர் பல்லடம் கோவை உட்பட்ட பகுதியில் கட்டிட பணிக்கு தேவையான மூலப்பொருட்கள் ஜல்லி மண் மேடை மண் போன்றவற்றை காரணம் பேட்டையில் இருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
காரணம் பேட்டி சுற்றுவட்டார பகுதிகளில் குவாரிகள் அதிகமாக இயங்கி வரும் நிலையில் ஜல்லி மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சற்று பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல உரிமையாளர்கள் டிரைவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்ப வேண்டும் மற்றும் பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சமீபகாலமாக மணல் ஜல்லி எடுத்துச் செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அல்லது ஏதேனும் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன. மேலும் ஜல்லி மண் அனைத்தும் ரோட்டில் கொட்டி செல்கின்றன.
இவ்வாறு ரோட்டில் கொட்டப்படும் மண் மற்றும் ஜல்லி இருசக்கர வாகனங்களில் வரும் முதியோர்கள் பெரியவர்கள் அனைவரும் விபத்துக்குள்ளாகி கைகால் முறையும் சூழ்நிலையும் உயிர் இழக்க செய்யும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. சற்று கவனத்தில் கொண்டே இருந்தால் உயிரினங்கள் காக்கப்படும்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.