நான் ஹிந்தி கத்துக்க முடியாது-நீ வேணா தமிழ் கத்துக்கோ-விஜய் பீஸ்ட்..!!

நடிகர் விஜய்யின் 65-வது படமான ‘பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.

படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
ரசிகர்களின் ஆரவாரம், ஆட்டம்பாட்டத்துடன் திரையரங்குகளில் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியானது. சென்னை, மதுரை ,கோவை, பொள்ளாச்சி,சேலம் உள்ளிட்ட நகரங்களில் அதிகாலைக் காட்சி திரையிடப்பட்டதால் இரவு முதலே திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.
திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியானதையொட்டி பட்டாசுகள் வெடித்து, ஆட்டம்பாட்டத்துடன் உற்சாகக் குரல் எழுப்பினர்.

கோவை, நாமக்கல், கோவில்பட்டியில் பல மணி நேரமாகக் காத்திருந்த ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
பீஸ்ட் படத்தை வரவேற்று அஜீத் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள், விஜய் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கில், பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அஜீத் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள் வரவேற்பை பெற்றுள்ளது.


விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இந்தி மொழி குறித்த வசனம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்லா தடவையும் இந்தியை ட்ரான்ஸ்லேட் பண்ணிட்டு இருக்க முடியாது’ உங்களுக்காக நான் இந்தி கற்றுக்கொள்ள முடியாது உங்களுக்கு தேவை என்றால் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என் ற விமர்சனம் இடம் பெற்று உள்ளது. அது தற்போது பேசு பொருளாகி உள்ளது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். படத்தில் எப்போதும் போல விஜய் சிறப்பாக நடித்திருப்பதாகவும், அரபிக் குத்து பாடலில் அவரது நடன அசைவு கண்களுக்கு விருந்தாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.
பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp