நெடுநாள் போராட்டங்களுக்கு பிறகு கல்லார்குடி தெப்பக்குளமேடு பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான பணிகள் ஆரம்பம்…!!

ஆனைமலைத் தொடரில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு அருகாமை பாரம்பரிய வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி கிராம மக்களுக்கு நிலப்பட்டா வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி காடம்பாறை, கவர்க்கல், சின்கோனா பழங்குடி கிராமங்களில் நில அளவை பணிகள் திங்கள், செவ்வாய் கிழமைகளில் நடைபெற்றது பெருந்தொற்று நோய், பெருமழை, நிலச்சரிவுகளால் வனம்சார்பூர்வகுடிகள் பாதிக்கப்படுவது வழக்கமானது. அத்தருணங்களில் சூழலுக்கு சேதமில்லாமல் மாற்று இடத்தை தேடிக் கொள்வது வெகு இயல்பானது பாரம்பரிய உரிமையாகும்.

ஆனைமலைத்தொடரில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான மாற்று இடத்தில் பல ஆண்டுகளாக குடியேறி வந்த போதிலும் புலிகள் சரணாலய விதிமுறைகள் என்ற பெயரில் பழங்குடிகளின் வாழ்வுரிமை மறுக்கப்பட்டு அவர்களுடைய கிராமங்களும், குடியிருப்புகளும் இன்றளவும் அங்கீகரிக்கப் படாமலேயே இருந்து வருகிறது.

இதனால் ஆனைமலையின் பூர்வகுடி காடர், முதுவர், மலைமலசர், புலையர், மலசர், இரவாளர் இனமக்கள் வனத்துறையால் திட்டமிட்டே பழிவாங்கப்பட்டதுடன் அரசின் நலத் திட்டங்களும், சலுகைகளும் முறையாக கிடைக்கப்பெறாமல் உரிமைகளை இழந்து ஆக்கிரமிப்பாளர்கள் எனும் அவப்பெயரை இதுவரை சுமந்து வந்தார்கள்.

ஆனால் கல்லார்குடி காடர் பழங்குடியின மக்களுக்கு இதுபோன்ற சூழல் ஏற்பட்ட போது அவர்களே முன்னின்று முன்னெடுத்த வீரமிக்க தொடர் அறவழி போராட்டங்கள் தோழமை சக்திகளால் வெற்றி பெற்றது. தெப்பகுளமேட்டில் அவர்களுக்கு மாற்று இடமும் கிடைத்தது. தமிழக அரசின் இச்செயல் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப் படுகின்றது.

இன்று அதன் தொடர்ச்சியாக ஆனைமலை தொடரில் இதுவரை கிராமங்களாக அங்கீகரிக்கப்படாத காடம்பாறை, கவர்க்கல், சின்கோனா, நவமலை ஆகிய கிராமங்களையும் அங்கு வாழும் மக்களுக்கும் வன உரிமைச்சட்டம் – 2006 இன் படி நில உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தொடர்ச்சியாக எடுத்துச் சென்றோம்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சமீரன் அவர்கள் கடந்த 5ம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டத்தில் வனத்தின் உரிமையாளரான பழங்குடிகளின் உரிமையை மறுப்பது ஏற்றுக்கொள்ள இயலாது. வனத்தை விட்டு பழங்குடிகள் பிரிக்க இயலாதவர்கள். அதுபோலவே தங்களது பூர்வீக கிராமத்தை விட்டும் பிரிந்து போக நினைக்க மாட்டார்கள்.

ஆனால் இயற்கை பேரிடர்கள், தவிர்க்க முடியாத காரணிகளாலே அவர்கள் வேறு வழியேயின்றி பாதுகாப்பான மாற்று இடத்திற்கு இடம் பெயர்ந்து உள்ளார்கள். இதன் உண்மையை வனத்துறை உணர வேண்டும் என்றதோடு இத்தகைய அனைத்து பழங்குடி வனக்கிராமங்களையும் அங்கீகாரம் செய்து அங்கு வாழும் ஏழை எளிய பழங்குடி மக்களுக்கு நிலப்பட்டாக்களை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டார்.


ஆனைமலை வனத்தின் பூர்வகுடிகள் கிராமத்திற்கும், அங்கீகாரத்திற்காகவும் நிலஉரிமை பட்டா பெறுவதற்காகவும் தொடர்ந்து இயங்கும் பழங்குடி இனத் தலைவர்கள் அண்ணன் தங்கசாமியின் பணிகள் மிக சிறப்பானது. அண்ணன் சாத்துக்குட்டி, தம்பிகள் கேசவன், மகேந்திர பிரபு, ராஜலெட்சுமி மற்றும் அன்புத்தோழர் பரமசிவம் – மலைவாழ் மக்கள் சங்கம், பொள்ளாச்சி நகர அனைத்து அரசியல் சமூக இயக்க கூட்டமைப்புக்கும், பழங்குடி தோழமை அமைப்புகளுக்கும், கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் தமிழக பழங்குடி மக்களின் சார்பாக பேரன்பும் நன்றியும்.. ச. தனராஜ் பழங்குடியினர் உரிமைக்கான செயல்பாட்டாளர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-அலாவுதீன் ஆனைமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp